உரம் தின்ற 3 ஆடுகள் பலி
Advertisement
ஒட்டன்சத்திரம், டிச. 5: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையை சேர்ந்தவர்கள் மலையாளம், விக்னேஷ், முனியப்பன். இவர்கள் நேற்று வழக்கம் போல் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் விட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த உரம் கலந்த அரிசியை தின்றதில் 3 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. தகவலறிந்ததும் இடையகோட்டை கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த 3 ஆடுகளையும் பரிசோதனை செய்து அப்பகுதியிலே புதைத்தனர்.
பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்னரே ஆடுகள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.
Advertisement