டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் கண்காணிப்பாளர்களுக்கு முறையான பயிற்சி அவசியம் தேர்வர்கள் கோரிக்கை
பழநி, டிச. 3: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் கண்காணிப்பாளர்களுக்கு முறையான பயிற்சி அவசியமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தற்போது அதிகளவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுகள் நடந்த போது தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் தேர்வு அறையில் தேர்வு வினா, கையெழுத்து உள்ளிட்டவை வழங்கல், பெறுதலில் பல குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்து வருகிறது. இதனால் அழிப்பானை பயன்படுத்தும் நிலைக்கு போட்டி தேர்வர்கள் ஆளாகின்றனர்.
இதனால் 2 முதல் 4 மதிப்பெண்கள் வரை தேர்வர்கள் இழக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கினால் தேர்வர்கள் மனமகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்வர். எனவே, தேர்வாணையம் தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.