பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்
வேடசந்தூர், டிச.2: கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜூராஜ் (61) என்பவர் தனது குடும்பத்துடன் கர்நாடகா மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காரில், சொந்த ஊர் செல்வதற்காக தனது மனைவி சீஜாபிஜூ (52) மற்றும் மகள் அமிஷா (23) ஆகியோருடன் புறப்பட்டார். காரை சிஜூ (47) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கார், கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், திண்டுக்கல் மாவட்ட எல்லையான கல்வார்பட்டி சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.