செல்போன் கடையில் நூதன திருட்டு
Advertisement
வேடசந்தூர், ஆக.19: வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த அசாருதீன் (28). வேடசந்தூர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை, இவரது கடைக்கு வாலிபர் ஒருவர், செல்போன் வாங்குவதற்காக டூவீலரில் வந்துள்ளார். செல்போன் விலையை கேட்டுவிட்டு, தன்னிடம் ரூ.4 ஆயிரம் மட்டும் உள்ளது. மீதி பணம் எனது நண்பர் கொண்டு வருகிறார் எனக் கூறிவிட்டு, கடையில் உள்ள செல்போன்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடை உரிமையாளர், மற்ற வாடிக்கையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, அந்த வாலிபர் செல்போனை எடுத்துக்கொண்டு டூவீலரில் தப்பி விட்டார். இது குறித்து கடை உரிமையாளர், போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement