தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பு விளைச்சல் அமோகம்

அரூர், செப்.30: அரூர் பகுதியில் கம்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. மகசூலை பறவைகளிடமிருந்து பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பொன்னேரி, ஈட்டியம்பட்டி, முத்தானூர் உள்ளிட்ட பகுதிகளி,ல் கம்பு பயிரிடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் விளைச்சலை தரும் பயிராகும். தற்போது மக்களிடையே ஏற்பட்ட சிறுதானிய உணவு விழிப்புணர்வு காரணமாக கம்பு, சோளம், ராகி, தினை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு வரவேற்பு நன்றாகவே உள்ளது. இதனால் கம்பு விலையும் கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விளைந்த கதிர்களை, பறவைகளிடமிருந்து காப்பாற்றுவது விவசாயிகளின் மிக பெரிய சவாலாக உள்ளது. வயலை சுற்றி புடவைகளை கட்டி விடுதல், கம்பு கதிர்களில் பிளாஸ்டிக் கவர்கள் சுற்றிவிடுதல், தட்டு, டிரம் உள்ளிட்டவைகளை வைத்து சத்தம் எழுப்புதல் உள்ளிட்ட யுத்திகளை பின்பற்றி வருகின்றனர். ஈட்டியம்பட்டியில் விவசாயி கூறுகையில், கம்பு கதிரை சாப்பிட குருவி, மைனா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் வருகின்றது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இவைகளின் வருகை அதிகமாக இருப்பதால், பகல் முழுவதும் தட்டு போன்ற பொருட்களை வைத்து சத்தம் எழுப்பி விரட்டி விடுகிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Related News