ஆடுகள் விற்பனை மந்தம்
காரிமங்கலம், அக்.29: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 600 ஆடுகள், 650 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஆடுகள் விற்பனை குறைந்தது. ரூ.30 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.55 லட்சத்திற்கு மாடுகளும், ரூ.3 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகளும் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து அதிகரித்த நிலையில் விற்பனை மந்த கதியில் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement