45 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
கடத்தூர், அக்.28: கடத்தூரில் நடைபெற்ற சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட 45 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கடத்தூர் பேரூராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று துப்புரவு ஆய்வாளர் விக்னேஷ், உதவியாளர்கள் மோகன், அஸ்வின்குமார் மற்றும் பணியாளர்கள் கடத்தூர் -பொம்மிடி பிரதான சாலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 45 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு. உடனே, அவற்றை கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.