பஸ்சில் செல்போன் திருடியவர் கைது
தர்மபுரி, ஆக.27: அரூர் சங்கிலிபாடியை சேர்ந்தவர் பாபு(45). இவரது மகனுக்கு கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் நேற்று மகனை அழைத்துகொண்டு கோவை செல்வதற்காக, அரூரில் பஸ் ஏறியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர், பாபுவின் செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதை அறிந்த பாபு சத்தம் திருடன், திருடன் என போடவே, அருகில் இருந்தவர்கள், அந்த நபரை துரத்திச்ெசன்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் அரூரை சேர்ந்த அறிவுமணி (37) என்பது தெரியவந்தது. செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அறிவுமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement