வாராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
காரிமங்கலம், நவ.26: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ட வாராகி அம்மன் கோயிலில், வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேங்காய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாகி இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர்.
Advertisement
Advertisement