மரவள்ளி அறுவடை தீவிரம்
அரூர், அக்.25: அரூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்ததால் அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. அறுவடை சமயத்தில் பெய்த தொடர் மழையால் நிலத்திலேயே கிழங்குகள் அழுகியதால், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் மரவள்ளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது. இந்த ஆண்டும் பருவமழை தொடக்கத்திலேயே அதிகளவு மழை பெய்து வருவதால் கிழங்குகள் அழுக தொடங்கும் முன் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement