மொரப்பூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்
அரூர், செப்.25: மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் துறையின் சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் தீர்த்தகிரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் நாகராஜ், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் சந்திரசேகர், கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர் குணசேகரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழ்துறை தலைவர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை தமிழ் உதவி பேராசிரியர் சதீஷ் அறிமுகம் செய்தார். கருத்தரங்கிற்கு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் மரியசெபஸ்தியான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசினார். பல்வேறு கல்லூரியில் இருந்து, 200 மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தமிழ் துறை பேராசிரியை நதியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் குமரவேல் நன்றி கூறினார்.