கலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
காரிமங்கலம், அக்.24: காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி கலைத் திருவிழா நடந்தது. இதில் 30 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், கல்லூரியில் படித்து வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, கலையில் கல்வி செய்வோம் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து தன்னம்பிக்கை பேச்சாளர் நிமலன் மரகதவேல், மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் கோபால், ராவணன், இளந்திரையன், செந்தில்குமார், ரமேஷ், பூங்கொடி, சோபனா, பேரவை தலைவி திவ்யதர்ஷினி மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.