சூதாடிய 6 பேர் கைது
தர்மபுரி, செப். 22: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் எஸ்ஐ பரமேஸ்வரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஒகேனக்கல் அருகே விடுதியையொட்டி, கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் சிலர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
Advertisement
போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்(58), குமார்(48), சிவராஜ்(53), அங்குராஜ்(50), பழனிசாமி (46), ரகு(43) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.5ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement