அங்கன்வாடி மையம் கட்டுமான பணி
காரிமங்கலம், ஆக.22: காரிமங்கலம் ஒன்றியம், கெண்டிகான அள்ளி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.17 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டிடப் பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, கட்டிடப் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர், நிர்வாகிகள் சந்திரன், பெரியசாமி, வக்கீல் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement