சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்
பாலக்கோடு, ஆக.21: காரிமங்கலம் அருகே, காதல் திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் தலைமறைவானார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா பெரியாம்பட்டி அருகே கூலி தொழிலாளியின் 17 வயது மகள், பிளஸ் 2 படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சிவசக்தி (23) என்பவர், சிறுமியிடம் சில நாட்களாக பழகி வந்துள்ளார். இந்த நட்பு காதலாக மலர்ந்தது. இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த மார்ச் மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இதில் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஊர் நல அலுவலர் சாந்தி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சிவசக்தியை தேடி வருகிறார்.