உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
காரிமங்கலம், ஆக.21: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 முதல் 15 வார்டு பொதுமக்கள் பயனடையும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் 2ம் கட்ட முகாம் நாளை (22ம் தேதி) நடக்கிறது. காரிமங்கலம் அருணேஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் முகாமில், மேற்கண்ட வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள், குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இதே போல், காரிமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம், அண்ணாமலைஅள்ளி, கேத்தன அள்ளி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், அனுமந்தபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறுமாறு செயல் அலுவலர் ஜீவானந்தம் மற்றும் பிடிஓ.,க்கள் சர்வோத்தமன், தனலட்சுமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement