தர்மபுரி பச்சமுத்து பிசியோதெரபி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
தர்மபுரி, செப்.19: தர்மபுரி பச்சமுத்து பிசியோதெரபி கல்லூரியில், நடப்பு 2025-2026 கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கீத்குமார், இயக்குனர்கள் சசிகலா பாஸ்கர், பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கணேசன் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கேஜி பிசியோதெரபி கல்லூரி முன்னாள் முதல்வர் அருண் கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி துணை முதல்வர் கவிதா, உதவி பேராசிரியர் கார்த்திகா, மாணவி வைஷ்ணவி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement