கோலாட்டம் ஆடி வந்து கலெக்டருக்கு அழைப்பு
தர்மபுரி, ஆக.19: தர்மபுரியில் நடைபெறும் கலைவிழா சங்கமம் மாநாட்டில் பங்கேற்க, கலெக்டருக்கு அழைப்பு விடுத்து நாட்டுப்புற கலைஞர்கள் கோலாட்டத்துடன் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாட்டுப்புற கலைஞர்கள் திரண்டு வந்தனர். கோலாட்டம் ஆடியவாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டுப்புற கலைஞர்கள் 2000 பேர் ஒன்று சேர்ந்து கலைவிழா சங்கமம் மாநாட்டினை தர்மபுரியில் நடத்த உள்ளோம். இந்த சங்கமம் மாநாட்டில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு கிராமிய கலைஞர்களுக்கு சான்று, கேடயம், பொன்னாடை வழங்கி சிறப்பிக்க வேண்டும். மாநாட்டினை சிறப்பிக்கும் வகையில் இசைக்கருவிகள் வழங்கிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.