பெட்ரோலுடன் வந்த எல்ஐசி ஏஜெண்ட் கைது
தர்மபுரி, ஆக.19: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(50). எல்ஐசி ஏஜெண்டான இவர், நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆபீசுக்கு மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது, நுழைவ வாயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கிருஷ்ணன் கொண்டுவந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அதில், ஒரு கேனில் பெட்ரோல் வைத்திருதது தெரியவந்தது. உடனே, பெட்ரோலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இதில், நிலப்பிரச்னையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், எச்சரிக்கை செய்து மாலையில் விடுவித்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் எல்ஐசி ஏஜெண்ட் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.