அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
கடத்தூர், நவ.18: கடத்தூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி நேற்று மருத்துவரிடத்தில் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பிட வசதி. நோயாளிகளுக்கான குடிநீர், உடன் தங்குபவர்களுக்கு இருப்பிட வசதி ஆகிய வற்றை கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுகின்றனவா? என மருத்துவ அலுவலரிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின் போது மருத்துவமனை அலுவலர் கனல்வேந்தன், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், செவிலியர், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement