அனுமதியின்றி பேனர் வைத்த தேமுதிகவினர் மீது வழக்கு
அரூர், செப். 17: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தேமுதிக 21ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அரூர் தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், தேமுதிகவினர் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில், அரசு அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அரூர் விஏஓ முரளி அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் தேமுதிக அரூர் நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் சேட்டுராவ் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement