ரூ.47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
அரூர், அக்.16:அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை நடக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்நடைகனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் ரூ.6,000 முதல் ரூ.47,500 வரையும், ஆடுகள் ரூ.5,200 முதல் ரூ.12,500 வரை ரூ.47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement