மது விற்ற இருவர் கைது
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி, செப்.15: பொம்மிடி அருகே உள்ள ஜாலியூர் மற்றும் புது ஒட்டுப்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக பொம்மிடி இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதனுக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் ஜாலியூரை சேர்ந்த முரளி (43) என்பவரது மீன் கடைக்குப் பின்னால் சோதனையிட்டதில், 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டின் அருகே சோதனையிட்டு, 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Advertisement