தி.க. நிதியளிப்பு பொதுக்கூட்டம்
பாப்பிரெட்டிபட்டி, செப்.15: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் மாநில பகுத்தறிவு கலைத்துறை மற்றும் அரூர் மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில், சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடியரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் வரவேற்றார். தி.க. தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசினார். திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன், ஆதி திராவிடர் நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், தகடூர் தமிழ்ச்செல்வி, திமுக வர்த்தகரணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, சிவாஜி, செங்கல் மாரி, ஜெயச்சந்திரன், வேங்கை தமிழ்ச்செல்வன், சாக்கன் சர்மா, கலைச்செல்வன், சுபேதார், இனமுரசு கோபால், தமிழ், பிரபாகரன், பெரு முல்லையரசு, யாழ்திலிபன், மணிமேகலை, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.