நவீன தொழில்நுட்ப விளக்க கருத்தரங்கம்
தர்மபுரி, ஆக.15: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவை இணைந்து, ராஷ்ட்ரிய கோகுல் மிஷின் திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை தர்மபுரி அதியமான் அரண்மனை கூட்டரங்கில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு ஆவின் பொது மேலாளர் மாலதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மரியசுந்தர், ஆவின் மேலாளர்கள் மணிவண்ணன், சரண்யா, ரமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஆவின் பொது மேலாளர் டாக்டர் உலகநாதன், பேராசிரியர்கள் டாக்டர் விஜயகுமார், டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய தொழில்நுட்பம் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவது குறித்து விளக்கி பேசினர். முகாமில், ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் ரமாதேவி வரவேற்றார். விரிவாக்க அலுவலர் பெரியசாமி நன்றி கூறினார்.