பட்டதாரி இளம்பெண் விஷமருந்தி தற்கொலை
தர்மபுரி, அக். 14: தர்மபுரி காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜெய(22). பிஏ பட்டதாரியான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை பளு காரணமாக, கடந்த சில நாட்களாக, மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக ஜெயயை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement