கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Advertisement
தர்மபுரி அக்.13: தர்மபுரி மாவட்டம், அரூர் வர்ணதீர்த்தம், கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மகள் ரித்திகா (21). அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ரித்திகா செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், படிப்பில் கவனம் சிதைந்து விடும் எனக்கூறி பெற்றோர் ரித்திகாவை கண்டித்துள்ளனர்.
இதனால், மனம் உடைந்த ரித்திகா, கடந்த 5ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement