தர்மபுரியில் வீட்டில் பதுக்கிய 67 கிலோ குட்கா பறிமுதல்
தர்மபுரி, ஆக.12: தர்மபுரி டவுன் எஸ்ஐ பிச்சமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஆத்துமேடு பகுதியில், குட்கா பதுக்கி சப்ளை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும், அங்கு ஒரு வீட்டில் இருந்த வடமாநில வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம் பிடித்தார். போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு, கடை மற்றும் புரோக்கர்களுக்கு சப்ளை செய்ய வைக்கப்பட்டிருந்த, 67 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.62 ஆயிரத்து 800 ஆகும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.