பெண் குழந்தை திடீர் சாவு
தர்மபுரி, ஆக. 12: தர்மபுரி மாவட்டம் அரூர் காட்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் எம்ஜி (38). இவரது மனைவி புஷ்பா(32). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன், 5 வயதில் மகள் உள்ளனர். இந்நிலையில், புஷ்பா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். கடந்த ஜூலை 26ம் தேதி, புஷ்பாவுக்கு அரூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி மருத்துவமனையில் இருந்து தாயும், சேயும் வீடு திரும்பினர். கடந்த 9ம் தேதி குழந்தைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குழந்தையை அரூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று முன்தினம் மாலை குழந்தை இறந்தது. இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.