டியூசனுக்கு சென்ற 2 மாணவர்கள் மாயம்
தர்மபுரி, அக்.10: தர்மபுரி மாவட்டம், அரூர் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி மும்தாஜ் (30). இவர்களது மகன் ஆரிப் (13). அரூர் தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ராகேஷ் (14). நண்பர்களான இருவரும், கடந்த 7ம் தேதி மாலை ஒரே சைக்கிளில் டியூசன் சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளனர். ஆனால், பின்னர் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் டியூசன் சென்டருக்கு சென்று விசாரித்த போது, அங்கு மாணவர்கள் வரவில்ைல என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர், அரூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement