டிஎஸ்பி பொறுப்பேற்பு
பாலக்கோடு, அக்.10: பாலக்கோடு உட்கோட்ட டிஎஸ்பி மனோகரன், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மனித உரிமை டிஎஸ்பியாக பணிமாறுதல் பெற்றார். இதனை தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜசுந்தர், பாலக்கோடு உட்கோட்ட டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது பாலக்கோடு உட்கோட்ட 7வது டிஎஸ்பியாக பொறுப்பேற்று கொண்டார். அவரை தொழில் அதிபர்கள், போலீசார் மற்றும் செய்தியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், விழாக்காலங்கள் வர உள்ளதால் கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.