இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, செப்.10: தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் தேவராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் பாலன், கோவிந்தராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, விஸ்வநாதன், மல்லிகா, நிர்வாகிகள் புகழேந்தி, சிவன், மாதப்பன், மல்லையன், ராமச்சந்திரன், சின்னசாமி, காரல்மார்க்ஸ், கந்தசாமி, கிரைஸாமேரி, ஜெயா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய பொருட்களின் மீது, அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்தும், அமெரிக்க ஆதரவு வெளியுறவு கொள்கையை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.