தனியார் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
தர்மபுரி, செப். 9: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள நெருப்பூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் நந்தினி (18). இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். நேற்று முன்தினம், கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு வெளியே சென்ற நந்தினி, மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியை சேர்ந்த பாலு மகள் ரீனா(20). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 6ம்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால், பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.