விசிக பொதுக்கூட்டம்
அரூர், ஆக.9: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அரூர் கச்சேரிமேடு ரவுண்டானாவில் இன்று(9ம் ேததி) மாலை தேர்தல் நிதியளிப்பு மற்றும் மதச்சார்பின்மை காப்போம் பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் நிறுவன தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வக்கீல் ஆ.மணி எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எனவே, கூட்டத்தில் மாநில, மாவட்ட, பேரூர், நகர, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள், தொழிலாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தெரிவித்துள்ளார்.