இயற்கை விவசாயிகள் சங்க கருத்தரங்கு
பாப்பாரப்பட்டி, ஆக.7: பாப்பாரப்பட்டியில் இயற்கை விவசாயிகள் சங்க கருத்தரங்கு நடந்தது. பென்னாகரம் வட்ட இலவச சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தேவேந்திரன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். சங்க கண்காணிப்பு குழு செயலாளர் ஆசீர்வாதம், சிறு வியாபாரிகள் குழு செயலாளர் முனுசாமி வரவேற்றார். சங்க இயற்கை இடுபொருட்கள் உற்பத்தியாளர்கள் குழு செயலாளர் தனசேகர், துணை தலைவர் ராமன் சங்கத்தின் மூலம் விற்பனை மையம் அமைப்பதற்கான ஆலோசனை வழங்கினர். இதில் நிர்வாகிகள் கண்காணிப்பு குழு செயலாளர் பச்சை, பாலக்கோடு நதிகள் இணைப்பு குழு செயலாளர் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் முனிராஜ், இணை செயலாளர் சிவலிங்கம், சங்க ஆலோசனை குழு இணை செயலாளர் மாரிமுத்து, சங்க விரிவாக்க குழு இணை செயலாளர் பூசாலி, பால் கொள்முதல் குழு செயலாளர் தர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க குழு பொருளாளர் சஞ்சீவன் நன்றி கூறினார்.