மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா
தர்மபுரி, ஆக. 6: தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு 23ம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி பாரதிபுரம் விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் பூங்கரகம் மற்றும் கூழ் பானைகளுடன் ஊர்வலமாக ஜெகநாதன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கீழ் மாரியம்மன் கோயில் தெரு, ஸ்கூல் தெரு ஆகிய தெருக்கள் வழியாக மாரியம்மன் கோயிலை அடைந்தனர். அங்கு சாலை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இலக்கியம்பட்டி இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.