வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தர்மபுரி, டிச.5: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டம், நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மதியரசி, சசிகலா அனிஷா, கலைமணி, கௌதம், ஷரிஷ்வர், தமிழ்செல்வன் ஆகிய 7 பேரை, பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ், உதவி தலைமையாசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனிராஜ், துணைத் தலைவர் ஜெயக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கந்தசாமி சங்கீதா, துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர். மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவித்த தமிழாசிரியர்கள், செந்தில் முதுகலை ஆசிரியர், துரை பட்டதாரி ஆசிரியர், சம்பத் பட்டதாரி ஆசிரியர், மோகன் குமார் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரையும் பாராட்டினர்.