ரூ.24 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
தர்மபுரி, நவ.5: தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் நேற்று ரூ.24 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம் போனது. பட்டு வளர்ச்சித்துறை சார்பில், தர்மபுரி நான்கு ரோடு அருகே பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஈரோடு மற்றும் சித்தோடு, சத்தியமங்கலம், கரூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர். தர்மபுரி ஏல அங்காடியில் தாங்கள் கொண்டுவரும் பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் வந்து ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். நேற்றைய ஏலத்திற்கு தர்மபுரி மற்றும் சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 52 விவசாயிகள் 3744 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொ ண்டு வந்திருந்தனர். இந்தப் பட்டுக்கூடுகள் ரூ.24 லட்சத்து 51 ஆயிரத்து, 358க்கு ஏலம்போனது.