காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு
தர்மபுரி, அக்.1: தர்மபுரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நாளை (2ம்தேதி) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனை கூடம் என அனைத்தும் இன்று (1ம்தேதி) இரவு 10 மணி முதல் வரும் 3ம்தேதி பகல் 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் மது விற்பனை செய்தாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement