ஆதார் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் டோக்கன் விநியோகம்
பாப்பிரெட்டிப்பட்டி, அக்.12: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரத்தில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் கார்டு தொடர்பான சேவைகள் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள, நாள் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டமாய் தபால் அலுவலகம் முன் காத்திருக்க வேண்டி உள்ளது. நீண்ட வரிசையில் நிற்பதால், முதியோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, டோக்கன்களின் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்த வேண்டும். மேலும், ஆதார் கார்டு எடுக்க, திருத்தங்கள் மேற்கொள்ள தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement