ரூ.2.46 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 1: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகேயுள்ள பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவருடன் கூடிய நூற்றாண்டு வளைவு அமைக்கும் பணி, பையர்நத்தம்- போதக்காடு வரை சுமார் ரூ.2.39 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி ஆகிய இரண்டு பணிகளுக்கான தொடக்க விழா, ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது.
இதில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்தும், அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் வெங்கடாசலம், சாந்தி, கிளை செயலாளர்கள் சங்கர், விஜயன், பூக்கடை வெங்கடேசன், குறிஞ்சிவெங்கடேசன், முருகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கார்த்திக், இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ், சார்பு அணி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.