வியாபாரியின் டூவீலர் திருட்டு
Advertisement
தர்மபுரி, டிச. 1: பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(45). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து கொண்டு, பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி வேலை விஷயமாக, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர், குடும்பத்தினரை பெங்களூருவில் விட்டு விட்டு மறுபடியும் ஊருக்கு வந்த போது, வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை காணவில்லை. இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் அண்ணாமலை புகார் அளித்தார். அதன் பேரில், பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement