அத்தி லிங்கத்திற்கு பஞ்ச வில்வ அர்ச்சனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி
செய்யாறு, ஜூலை 23: ஆடி மாத பிரதோஷத்தையொட்டி அத்தி லிங்கத்திற்கு பஞ்ச வில்வ அர்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தல் கிராமத்தில் நட்சத்திர விருச்ச விநாயகர் கோயில் வளாகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அத்தி லிங்க சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஐந்து விதமான வில்வம், நொச்சி, கிளுவை (முட்கிளுவை), விளா, மாவிலங்கை ஆகிய பஞ்ச வில்வம் திருக்கோயில் வளாகத்தில் வளர்ந்துள்ள இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கத்தை வழிபட்டு சென்றனர்.