முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தேவாலா அரசு பள்ளி முதலிடம்
பந்தலூர், செப்.19: முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கபடி போட்டியில் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி ஹெப்ரான் பள்ளியில் நேற்று முன்தினம் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடைபெற்றது.
Advertisement
இந்த போட்டியில் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் இடத்தை பிடித்து ரூ.36,000 மதிப்புடைய காசோலையை வென்று சாதித்துள்ளனர். தொடர்ந்து, அடுத்து நடக்கவிருக்கும் மாநில போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் தனுஷ், மஞ்ஜிஷ்குமார், ரோஷன், விஷால் ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ்குமார், உதவி தலைமையாசிரியர் கிருஷ்ணகுமார், கணித ஆசிரியர் கவியரசு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Advertisement