தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை மின்வாரிய அலுவலக கிடங்கு பகுதியில் மின்சார ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

Advertisement

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துணை மின்வாரிய அலுவலக கிடங்கு பகுதியில் மின்சார ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்டார். கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் மங்காவரம் பகுதியைச் சேர்ந்த ரவி(52) என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுமதி(48) என்ற மனைவியும், அம்மு, மதிமலர், சுஜிதா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை ரவி தனது உறவினர் அன்பு என்பவருக்கு போன் செய்து தனது 3வது மகள் சுஜிதாவை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, ரவியுடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் செல்போனில் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது, வெகு நேரம் அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், அன்று இரவு சந்தேகத்தின் பேரில் துணை மின்வாரிய அலுவலக கிடங்கு பகுதிக்கு சென்று உறவினர்கள் பார்வையிட்டனர். அங்கு ரவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் சட்டை பையை சோதனை செய்தனர். அதில் இருந்த கடிதத்தில், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்த ஊழியரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement