மணல்மேல்குடியில் விபத்தில் காயமடைந்த மானை மீட்டு காட்டில் விட வேண்டும்
Advertisement
அறந்தாங்கி, மே 23: மணமேல்குடியில் அடிபட்ட புள்ளிமானுக்கு முதலுதவி அளித்து, கட்டி வைத்து, உணவு, நீர் கொடுக்காமல் உள்ளதால், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள அமரடக்கியில் கடந்த 19-ந் தேதி புள்ளிமான் வாகனம் மோதி காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோடியகரையில் கட்டி வைத்து உள்ளனர். அந்த புள்ளிமான் தண்ணீர், உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும், அதை மீட்டு வனப்பகுதியில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Advertisement