அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம்
அறந்தாங்கி,அக்.2: அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் லதா, மற்றும் தலைமை காவலர்கள் மோகனசுந்தரம், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைபர் குற்றங்களை பற்றி எடுத்து கூறி சைபர் குற்றங்களில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குமரேசன் செய்திருந்தார்.
Advertisement
Advertisement