தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழுவினர் ஆய்வு

கடலூர், அக். 29: கடலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்ததாலும், தொடர்ந்து பனிப்பொழி ஏற்பட்டதாலும் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து, 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க கோரி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடிதம் அனுப்பினார்.

Advertisement

இதனை ஏற்று, இது தொடர்பாக ஆய்வு செய்ய நான்கு குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த 4 ஒன்றிய குழுக்கள் தனித்தனியாக பிரிந்து தமிழகம் முழுவதும் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று கடலூர் வட்டம் தூக்கணாம்பாக்கம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய தானியங்கள் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் பிரீத்தி தலைமையில் ஒன்றிய அரசு துறை அதிகாரிகள் பிரியா பட், அனுபமா, உமா மகேஸ்வரி, அருண் பிரசாத் ஆகியோர் தூக்கணாம்பாக்கம் பகுதி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை ஆய்வு செய்து, நெல்லின் ஈரப்பத தன்மை குறித்தும், தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கொள்முதல் நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். காலை 8.40 மணிக்கு வருகை தந்த மத்திய குழுவினர் 9.20 வரை ஆய்வு பணியை மேற்கொண்டனர். கடலூர் ஆர்டிஓ சுந்தர்ராஜன், என்எல்சி சிவ ருத்ராயன் மற்றும் அரசு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதேபோல குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லூர் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து மாதிரிகளை சேகரித்தனர். கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை 199 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 92,330 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில், இந்த ஆய்வு நடைபெறுவதாக ஒன்றிய ஆய்வு குழுவினர் தெரிவித்தனர். ஆய்வின்போது, கடலூர் மண்டல மேலாளர் கமலம், துணை மேலாளர் விஸ்வநாதன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் கலியமூர்த்தி, கொள்முதல் அலுவலர் ரங்கநாதன், பட்டியல் எழுத்தர் ரகுவசந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற ஒன்றிய குழுவினர், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்லை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல், தார்ப்பாயில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்லையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நெல் ஈரப்பதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஒன்றிய குழுவினர், நெல் மாதிரிகளை சேகரித்து, நெல்லின் ஈரப்பதம், தரம் குறித்து ஆய்வு நடத்தினர். அவர்களுக்கு தமிழக நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் விளக்கினர். இதையடுத்து ஒன்றிய குழுவினர் புறப்பட்டு சென்றனர்.

ஆய்வு குறித்து விவசாயிகளுக்கு தகவல் இல்லை

கடலூர் மாவட்டத்தில் நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்வார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென திட்டத்தின் பயணம் மாற்றப்பட்டது. தொடர்ந்து ஒன்றிய குழுவினர் வருகைக்காக விவசாயிகள் தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைக்க காத்திருந்தனர். கடலூர் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகவே செயல்பட்டு வரும் நிலையில், கூடுதல் ஈரப்பத தன்மையுடன் கொள்முதல் செய்வது குறித்தும் விளக்க சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலைய பகுதி விவசாயிகள், அலுவலர்கள் காத்திருந்தனர். ஆனால் மத்திய குழுவினர் ஆய்வு என்பது திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர்.

இதனால் விவசாயிகள் தரப்பு தங்களது பாதிப்புகள் குறித்து ஒன்றிய குழுவினரிடம் தெரிவிக்க முடியவில்லை என ஆதங்கப்பட்டனர். மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் விற்பனைக்காகவும் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் பாதிப்பின் உண்மை நிலை குறித்து ஒன்றிய குழுவினரிடம் எடுத்துரைப்பது என்பது முழுமை அடையாமல் போனதாக விவசாயிகள் தரப்பினர் தெரிவித்தனர். ஆய்வு தொடர்பான தகவலும் மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நேற்று காலை திடீரென தெரிவிக்கப்பட்டதால் பல்வேறு வகையில் உண்மை தன்மை முழுமை அடையாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News