கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி
கல்வராயன்மலை, நவ. 26: கல்வராயன்மலையில் நேற்று அதிகாலை திடீர் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் வெள்ளிமலை, வஞ்சிகுழி, மூலக்காடு, கரியாலூர், கிளாக்காடு, சின்ன திருப்பதி, சேராப்பட்டு உள்ளிட்ட 177 சிறிய மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வந்த நிலையில் நேற்று திடீரென கல்வராயன்மலையில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் காலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்து இருண்டு காணப்பட்டது. அது மட்டும்மல்லாமல் ஒரு சில கிராமங்களில் பகலிலே பனிப்பொழிவு, சாரல் மழை பெய்தது. மிதமான அளவில் அதிகாலை முதல் பகலில் அதிக அளவில் மூடுபனி பொழிவால் சாலைகள் இருண்டு காணப்பட்டதால் வாகன ஓட்டிகளால் வாகனம் ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.
Advertisement
Advertisement