ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் சடலமாக மீட்பு
புவனகிரி, அக். 26: புதுச்சத்திரம் அருகே உள்ள பெத்தாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (60). முதியவரான இவர் நேற்று முன்தினம் ஆடு மேய்ப்பதற்காக அந்த பகுதிக்கு சென்றார்.அப்போது பரவனாற்றை கடக்கும்போது திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் மணிவேலின் உடல் நேற்று மதியம் புதுச்சத்திரம் அருகே உள்ள கம்பளிமேடு என்ற இடத்தில் கரை ஒதுங்கியது.இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிவேல் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ரோகிணி அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement